இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த தமிழக வீரர் அஸ்வின் மனைவி யார் தெரியுமா? தோழியே மனைவியான சுவாரசிய கதை
தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் கிரிக்கெட் வீரர் அஸ்வின். 1986 ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ்நாடு அளவில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார்.
முதலில் பேட்ஸ்மேனாக தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்த அஸ்வின் பின்னர் ஸ்பின் பவுலராக அவதாரம் எடுத்தார்.
இவரது பவுலிங் திறமையை பார்த்த இந்திய கிரிக்கெட் வாரியம் இவரை இந்திய அணிக்கு விளையாட தேர்வு செய்தது.
இந்திய அணியில் தனது திறமையை காட்ட தொடங்கிய அஸ்வின் வரிசையாக பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
அஸ்வின் தனது சிறுவயது தோழியான ப்ரீத்தி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ப்ரீத்தியும், அஸ்வினும் பள்ளியில் மட்டுமின்றி ஒரே கல்லூரியிலும் ஒன்றாக படித்தனர். அவர்களின் நட்பு பின்னாளில் காதலாக மாறியது.
இருவர் குடும்பமும் ஏற்கனவே நண்பர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு எந்தவொரு எதிர்ப்பும் எழவில்லை. இதன் காரணமாக அஸ்வின் மற்றும் ப்ரித்தி தங்களது டேட்டிங் காலத்தை பிரச்சினையின்றி மகிழ்ச்சியுடன் அனுபவித்தனர்.
இதன்பின்னர் இரு வீட்டாரின் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதத்துடன் அஸ்வின் - ப்ரீத்தி திருமணம் நடைபெற்றது.