கிரிக்கெட் உலகில் சாதனை மன்னனாக வலம் வரும் தமிழன் அஸ்வின்! அவரின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தன்னுடைய மாயாஜால சுழற்பந்து வீச்சால் எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக அஸ்வின் விளங்குகிறார் என கூறினால் அது மிகையாகாது.
அதுமட்டுமில்லாமல் பல சமயங்களில் துடுப்பாட்டத்திலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
அஸ்வின் கடந்த 1986ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளராகவே தனது கிரிக்கெட் பயணத்தை அவர் தொடங்கினார். ஆனால் ஆனால் இடுப்பு காயம் காரணமாக, அவர் தனது முடிவை மாற்ற வேண்டியிருந்தது.
அதன் பிறகு அவர் ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சில் தனது கையை முயற்சித்தார். அதன் பலன் என்ன என்பது இன்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.. ஆம்! உலகளவில் உள்ள சிறந்து சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராக அஸ்வின் தற்போது திகழ்கிறார்.
அஸ்வினின் தற்போதைய சொத்து மதிப்பு $ 15 மில்லியன் ஆகும்.
அவரின் மாதம் வருமானம் ரூ 50 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின் நிகர மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் 40% அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
அவரின் வருமானம் அதிகரித்த நிலையிலேயே சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அஸ்வினுக்கு சென்னையில் சொகுசான பிரம்மாண்ட வீடு உள்ளது.
இதோடு அவருக்கு சில நாடுகளில் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் உள்ளது. கார்கள் என்று பார்த்தால் உலகின் விலையுயர்ந்த கார்களான ஆடி, ரோல்ஸ் ராய்ஸ் போன்ற கார்களை அஸ்வின் வைத்துள்ளார்.