இந்த ஜெர்சியில் நான் உங்களே பார்த்ததேயில்லையே! மகளுடன் அஸ்வின் பெருமையுடன் வெளியிட்ட புகைப்படம்
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில், அடுத்து வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயாராகி வருகிறது.
இதற்கான இந்திய அணியின் ஜெர்சி கூட சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்திய அணியின் புதிய ஜெர்சியை அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, அதில் நான்(மகள்) உங்களை இது போன்ற ஜெர்சியில் பார்த்ததே இல்லை என்று கூறும் போது எப்படி இருக்கும்? என்று பதிவிட்டுள்ளார்.
ஏனெனில், அஸ்வின் டி20 போட்டிகளில் விளையாடியே நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்பதால், அவருடைய மகள் இந்திய அணி அணிந்திருக்கும் ஜெர்சியில் அஸ்வினை பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது,