அந்த அழகிய பெண் மீது கண்களை வைத்த தமிழக வீரர் அஸ்வின்! உருவான அற்புதமான காதல்
ரவிச்சந்திரன் அஸ்வின் - ப்ரீத்தி நாராயணனின் அழகான காதல் கதை.
தம்பதிக்கு பாரம்பரிய முறையில் நடைபெற்ற திருமணம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருப்பவர் தமிழரான ரவிச்சந்திரன் அஸ்வின். அவருக்கும் ப்ரீத்தி நாராயணன் என்ற பெண்ணிற்கும் கடந்த 2011ல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அஸ்வின் - ப்ரீத்தியின் காதல் கதை சுவாரசியமானது..!
அஸ்வின் தனது பள்ளி நாட்களில் தான் முதன்முதலில் அழகான ப்ரித்தியின் மீது கண்களை வைத்தார். இருவருக்கும் இடையே ஒரு நட்பு மலர்ந்து, இதையடுத்து ப்ரீத்தி படிக்க சேர்ந்த கல்லூரியிலேயே அஸ்வினும் சேர்ந்தார். ஒன்றாக ஒரே கல்லூரியில் சேரும்போது அந்த நட்பானது வலுவாக வளர்ந்தது.
dnaindia
இந்த ஜோடி சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் தான் சேர்ந்தனர், அங்கேதான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. குடும்பங்கள் ஒருவருக்கொருவர் நன்கு அறிந்திருந்ததால், எந்தவொரு எதிர்ப்பும் வரவில்லை.
அஸ்வின் மற்றும் ப்ரீத்தி தங்களது டேட்டிங் காலத்தை தடையின்றி அனுபவித்தனர். ஒரு சமயத்தில் அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான மற்றும் இன்றியமையாத வீரராக மாற தொடங்கினார்.
இதனால் அவர் ப்ரீத்திக்கு ஒதுக்கும் நேரம் குறைந்தது, அஸ்வின் அவர் பக்கத்தில் இல்லாத போதிலும் அது அவர்களின் காதலில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படத்தவில்லை.
chennaimemes
அஸ்வின் கிரிக்கெட் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை ப்ரீத்தி புரிந்து கொண்டார். 2011- ல் தான், இந்த ஜோடி இறுதியாக வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடிவு செய்தது.
அதன்படி நவம்பர் 13, 2011 அன்று பாரம்பரிய முறையில் அஸ்வின் - ப்ரீத்தி திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் அஸ்வின் தனது மனைவியுடன் நேரத்தை செலவிடவும், திருமண வாழ்வின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் கிரிக்கெட்டில் இருந்து சிறிய இடைவெளி எடுத்து கொண்டார்.