இது மாதிரி நடந்துகிட்டா மதிப்பு தானாகவே வரும்! தமிழக வீரர் அஸ்வின் கொடுத்த பதிலடி
இந்திய கிரிக்கெட் அணி தொடர்பில் ரமீஸ் ராஜா கூறிய கருத்துக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் 16ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் வரும் 23ஆம் திகதி மோதுகிறது. உலகக்கோப்பை வரலாற்றில் கடந்தாண்டு வரை இந்திய அணியை ஒரு முறை கூட வீழ்த்த முடியாமல் பாகிஸ்தான் இருந்து வந்தது.
12 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி மட்டுமே கண்டிருந்த இந்திய அணி கடந்தாண்டு முதல் முறையாக தோல்வி பெற்றது. இது குறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவானும், அந்நாட்டு வாரிய தலைவருமான ரமீஸ் ராஜா, இத்தனை ஆண்டுகள் இந்தியாவிடம் தோற்றதால் பாகிஸ்தான் அணியை ரசிகர்கள் மதிக்காமல் இருந்தனர். ஆனால் இந்தியாவை வீழ்த்தியதில் இருந்து பாபர் அசாமின் படைக்கு மதிப்பும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன என கூறினார்.
BCCI
இதற்கு பதிலளித்த இந்திய வீரர் அஸ்வின், கிரிக்கெட்டை ஒரு போட்டியாக மட்டுமே பார்க்க வேண்டும். அதில் அரசியல் அழுத்தங்களை கொண்டு வந்து விளையாடக்கூடாது. இத்தனை ஆண்டுகள் பாகிஸ்தான் அணி மீது நாங்கள் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தோம்.
டி20 கிரிக்கெட்டில் அனைத்து போட்டிகளுமே மிகவும் சிறிய வித்தியாசத்தில் தான் வெற்றி, தோல்வி இருக்கும். கடைசி வரை போராடும் வீரர்களுக்கு தானாகவே மதிப்பு கிடைக்கும் என கூறியுள்ளார்.