உலக கோப்பை நடக்கும் மைதானத்தில் அஸ்வின் செய்த வேடிக்கையான செயல்! கெமராவில் சிக்கிய காட்சி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானத்தில் தனது உடையை கண்டுபிடிக்க அஸ்வின் அதை முகர்ந்து பார்த்த வேடிக்கையான வீடியோ வெளியாகியுள்ளது.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியின் போது டாஸ் போடும் நேரத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மைக்கில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னாடி இருந்த அஸ்வின் செய்த வேடிக்கையான செயல் கெமராவில் பதிவானது. அதன்படி மைதானத்தின் தரையில் ஒரே மாதிரியான இரண்டு ஜெர்சி இருந்தன, இரண்டையும் கையில் எடுத்த அஸ்வின் அதில் எது தன்னுடையது என அறிய இரண்டையும் மூக்கில் வைத்து முகர்ந்து பார்த்தார்.
??????? Ash what are u smelling @ashwinravi99 https://t.co/9b0ecu2lic
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 7, 2022
பின்னர் தனது உடையை கண்டுபிடித்தவர் மற்றொன்றை கீழே போட்டார். இது குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.
இந்த வீடியோ பதிவை பார்த்த முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், அஸ்வின் எதை முகர்ந்து பார்க்கிறாய் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.