6000 ரன், 600 விக்கெட்டுகள்! ஒரே போட்டியில் மிரட்டல் சாதனைகள் படைத்த ஜடேஜா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா பல்வேறு சாதனைகளை படைத்தார்.
இந்தியா வெற்றி
நாக்பூரில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 248 ஓட்டங்கள் எடுத்தது. பட்லர் 52 ஓட்டங்களும், பெத்தெல் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்தியா 38.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 251 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சுப்மன் கில் 87 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 59 ஓட்டங்களும் விளாசினர். இப்போட்டியில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், 10 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்தார்.
சாதனை
இதன்மூலம், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஜேம்ஸ் ஆன்டர்சனை (40) பின்னுக்குத்தள்ளி ஜடேஜா (42) முதலிடம் பிடித்தார்.
அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 6வது இந்திய வீரர் எனும் சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
அத்துடன் 600 விக்கெட்டுகளுடன் 6000 ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது இந்தியர் என்ற அரிய சாதனையையும் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) படைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |