சோம்பேறித்தனத்தால் முக்கிய கேட்சை கோட்டை விட்ட ஷிவம் துபே! கோபப்பட்ட ஜடேஜா, பிராவோ வீடியோ
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங்கின் போது சென்னை அணி வீரர் ஷிவம் துபேயின் சோம்பேறித்தனமான செயலால் ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ கோபமடைந்தனர்.
குறித்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தவர் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் டேவிட் மில்லர் தான். ஏனெனில் அவர் 51 பந்துகளில் 94 ரன்கள் குவித்து தன்னுடைய அணி வெற்றி பெற பெரிதும் உதவினார்.
போட்டியில் 17வது ஓவரின் போது சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ வீசிய பந்தை மில்லர் மிட்-விக்கெட்டை நோக்கி அடித்தார், பந்தானது மேலே பறந்து வந்த நிலையில் அங்கு ஷிவம் துபே பீல்டிங்கில் இருந்தார்.
— Addicric (@addicric) April 17, 2022
அவர் பந்தை கேட்ச் பிடிப்பார் என பிராவோ எதிர்பார்த்த நிலையில் மெதுவாக ஓடி வந்த துபே கேட்ச் பிடிக்க தவறினார்.
இதையடுத்து பிராவோவுக்கும், அணித்தலைவர் ஜடேஜாவுக்கு துபே மீது கோபம் வந்தது. தனது தொப்பியை கழற்றி வீசுவது போல கோபத்தை ஜடேஜா வெளிப்படுத்தினார்.
ஏனெனில் சிஎஸ்கே வீரர்கள் மில்லரின் விக்கெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர், இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.