டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்! முதலிடம் பிடித்து சாதனை படைத்த இந்திய வீரர் ஜடேஜா! பின் தொடரும் தமிழன் அஸ்வின்
ஐசிசியின் புதிய ஆல்ரவுண்டருக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹொல்டர் முதலிடத்தில் இருந்து வந்தார்.
ஆனால் சமீபத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜேசன் நான்கு இன்னிங்சில் வெறும் 34 ரன்கள் எடுத்ததோடு மொத்தம் 6 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து அவர் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டு முதலிடத்தை ஜடேஜா பிடித்துள்ளார்.
தற்போது 386 புள்ளிகளுடன் ஜடேஜா முதலிடத்திலும், 384 புள்ளிகளுடன் ஜேசன் இரண்டாமிடத்திலும், ஸ்டோக்ஸ் 377 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், தமிழகத்தை சேர்ந்த மற்றொரு இந்திய வீரர் அஸ்வின் 353 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர்.