டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை பட்டியலில் இணைந்த ஜடேஜா
jadeja test record: டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா சாதனை
காலியில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 462 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 284 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இதில், இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்களை கைப்பற்றிய 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முன்னதாக இந்த பட்டியலில் கபில்தேவ்,ஹர்பஜன் சிங், அணி கும்பிளே, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.
மேலும், டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்கள் மற்றும் 4000 ஓட்டங்கள் எடுத்துள்ள உலகின் 4வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த சாதனை பட்டியலில், இந்தியாவின் கபில் தேவ், இங்கிலாந்தின் இயான் போத்தம், நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோர் உள்ளனர்.
இதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் கைப்பற்றியுள்ள 3வது இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
433 விக்கெட்டுகளுடன் இலங்கையின் ரங்கனா ஹெராத் முதலிடத்திலும், 362 விக்கெட்டுகளுடன் நியூசிலாந்தின் டேனியல் வெட்டோரி 2வது இடத்திலும் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |