உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணிய போகும் ஜெர்சி இது தான்! கெத்தாக அணிந்து ஜடேஜா பதிவிட்ட புகைப்படம்
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணி அணியப் போகும் ஜெர்சியை அணிந்து வீரர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடர் நடைபெற துவங்கிய நிலையில், அந்த தொடருக்கான இறுதிப் போட்டி வரும் ஜுன் மாதம் 22-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப் போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும் மோதவுள்ளன.
இங்கிலாந்து செல்வதற்காக இந்திய வீரர்கள் 14 நாட்கள் குவாரண்டைனில் உள்ளனர். இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட போகும், ரவீந்திர ஜடேஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்த போட்டியில் அணியப் போகும் ஜெர்சியை போட்டுக் கொண்டு, 90-s கிட்ஸின் பழைய நினைவுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் இந்திய அணியின் ஜெர்சி பழைய இந்திய அணி, அதாவது 90-களில் இந்திய அணிந்திருந்த ஜெர்சி போன்று உள்ளதால் ஜடேஜா அப்படி குறிப்பிட்டுள்ளார்.
⏪Rewind to 90’s ? #lovingit #india pic.twitter.com/bxqB6ptfhD
— Ravindrasinh jadeja (@imjadeja) May 29, 2021