டோனிக்கு பின் நான் CSK கேப்டன் ஆக விரும்புகிறேன்! டிரண்டாகும் ஜடேஜா: வைரலாகும் டுவிட்
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு டோனிக்கு பின் ஜடேஜா கேப்டன் ஆக விரும்புவதாக கூறி டுவிட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் ஆன டோனி, தற்போது அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று, ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
அதன் படி இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டதால், அது மீண்டும் வரும் 19-ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்கவுள்ளது.
இதற்காக ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ள வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை அணி வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், பிரபல சி.எஸ்.கே ரசிகர்களின் பக்கத்தை கொண்டு டுவிட்டர் ஒன்று, டோனி குறித்து கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளது. அதில், டோனிக்கு பின் சென்னை அணிக்கு கேப்டன் ஆக யாரை விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
?⚔️?#WhistlePodu | @imjadeja ? pic.twitter.com/Mnx93U9qCa
— CSK Fans Army™ ? (@CSKFansArmy) September 14, 2021
இதற்கு ரசிகர்கள் பலரும் பதில் அளித்து வரும் போது, இந்திய அணியின்ஆல் ரவுண்டரும், சென்னை அணி வீரருமான ரவீந்திர ஜடேஜா நம்பர் 8 என்ற எண்ணை பதில் அளித்துள்ளார்.
8 என்ற எண் ரவிந்திர ஜடேஜாவின் ஜெர்சின் எண் என்பதால், அதை குறிக்கும் வகையில் அவர் குறிப்பிட்டதாக் கூறப்படுகிறது.
இதைக் கண்ட ரசிகர்கள் பலர், ஜடேஜாவிற்கு இந்த ஆசை வேற இருக்கிறதா என்று அவரை டிரண்டாக்க, அதன் பின் இந்த டுவிட் உண்மை தானா என்று பார்த்த போது, அது உண்மை கிடையாது என்பது தெரியவந்துள்ளது.
இந்த டுவிட்டை ஜடேஜா போட்டவுடனே நீக்கிவிட்டதாக கூறப்பட்டாலும், அவருடைய ஒரிஜினல் அக்கவுண்ட்டை சரிபார்த்த போது, இது ஜடேஜாவே கிடையாது, யாரோ போட்டோ ஷாப் செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
ஏனெனில் ஜடேஜாவின் புரோபைல் பிக்சர் கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்டது. அதன் பின் மாற்றவேயில்லை, ஆனால், ஜடேஜா பதில் அளித்ததாக கூறப்படும் டுவிட்டரில் புரோபைல் பிக்சர் வேறு மாதிரி உள்ளது. இதில் இருந்தே இது ஒரு போட்டோஷாப், யாரோ வேண்டும் என்று இப்படி செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.