இந்திய அணிக்கு பெரும் அடி! ரவீந்திர ஜடேஜா வெளியிட்ட புகைப்படம்: கடும் வேதனையில் ரசிகர்கள்
இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், அதன் உண்மை என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டருந்தார்.
ஆனால் அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அது குறித்து வெளியாகியுள்ள தகவலில், மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலில் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, உள்காயம் இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்காரணமாக, நான்காவது டெஸ்ட் போட்டியில் இவர் கலந்துகொள்ள முடியாது என கூறப்படுகிறது.
சமீபகாலமாக இந்தியாவிற்கு ரவீந்திர ஜடேஜா ஒரு சிறப்பான ஆட்டத்தை கொடுத்து வருகிறார். முக்கியமான நான்காவது டெஸ்ட் லண்டனில் வரும் 2-ஆம் திகதி துவங்கவுள்ளது,
இதில் அவர் இல்லை என்றால் அது பெரிய அடி தான் என்று கணிக்கப்படுகிறது. அதே சமயம் லண்டனை பொறுத்தவரை அஸ்வின் சிறப்பாக் பந்து வீசுவார் என்பதால், இதுவும் ஒரு நல்லதுக்கு தான், அப்போது தான் அஸ்வினுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.