வெறும் ரூ.10க்கு எண்ணற்ற நன்மைகள்: அடிக்கடி வாங்கி சாப்பிடுங்க
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை நாம் வாழைக்காய்க்கு கொடுப்பதில்லை, பஜ்ஜி, வறுவல் என வாழைக்காயில் எண்ணற்ற ரெசிபிக்கள் செய்யலாம்.
வாழைக்காயில் நார்ச்சத்து, விட்டமின் சி, விட்டமின் ஏ, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
குடல் பக்டீரியாவை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மாவுச்சத்து வாழைக்காயில் அதிகம் நிறைந்திருக்கிறது, இதனால் உணவானது எளிதில் செரிமானம் ஆவதுடன் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது, மலச்சிக்கல் பிரச்சனையையும் தடுக்கலாம்.
இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது, ஆனால் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் பொட்டாசியம் அதிகளவில் இருக்கிறது, இதில் உள்ள விட்டமின் பி6 ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.
வாழைக்காயில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆண்டிஆக்சிடென்டுகள் முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |