மாதம்பட்டி ரங்கராஜின் பச்சை மாங்காய் ஊறுகாய்: எப்படி செய்வது?
பொதுவாக திருமண விருந்துகளில் பரிமாறப்படும் பச்சை மாங்காய் ஊறுகாய் சுவையானதாக இருக்கும்.
ஆனால் இந்த ஊறுகாயை பாட்டிலில் வைத்து ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியாது. தேவைக்கு ஏற்ப அவ்வப்போது செய்துகொள்ளவேண்டும்.
அந்தவகையில், மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் பச்சை மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மாங்காய்- 1
- மிளகாய்ப் பொடி- ஒரு ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- நலலெண்ணெய்- 4 ஸ்பூன்
- கடுகு- ஒரு ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 2
- கறிவேப்பிலை- ஒரு கொத்து
செய்முறை
முதலில் மாங்காயை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
இதன் பின்னர் ஒரு தாளிப்பு கடாயில் நல்லெணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
இந்த தாளித்த கலவையை மாங்காய் ஊறுகாயில் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
இந்த ஊறுகாய் சாம்பார், ரசம், மோர் என அனைத்து சாதத்துடனும் சேர்த்து சாப்பிட சுவையானதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |