Meta-வின் புதிய Ray-Ban Smart Glasses இந்தியாவில் வெளியீடு - விலை என்ன தெரியுமா?
மெட்டா நிறுவனத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட Ray-Ban AI ஸ்மார்ட் கண்ணாடிகள் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த கண்ணாடியின் ஆரம்ப விலை ரூ.29,900-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடிகள் பல அம்சங்களை அனுபவிக்க முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்ணாடிகளில் உள்ள Meta AI Voice Assistant மூலமாக, படங்கள் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது, லைவ் ஸ்ட்ரீம் செய்யும் சாத்தியம் உள்ளிட்டவை குரல் கட்டளைகளில் இயங்கும்.
EssilorLuxottica நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொடல்கள் Ray-Ban India வலைதளத்தில் ரூ.35,700 வரையிலான விலைகளில் பல வடிவங்களுடனும் கிடைக்கின்றன.
Ray-Ban Meta AI Glasses முக்கிய அம்சங்கள்:
- 12MP Camera மற்றும் 5 Microphone அமைப்பு.
- 3 நிமிடங்கள் வரை வீடியோ பதிவு செய்யலாம்.
- உட்புறம்/வெளிப்புற வெளிச்சத்திற்கு ஏற்ப மாறும் Transition லென்ஸ்கள்.
- Meta AI செயலியுடன் இணைத்து புகைப்படங்கள் நேரடியாக மொபைலில் சேமிக்கலாம்.
- Open-ear ஸ்பீக்கர்கள் மற்றும் Adaptive volume system.
- ஒவ்வொரு சார்ஜில் 4 மணி நேரம், case மூலம் மொத்தம் 36 மணி நேரம் வரைக்கும் பயன்படுத்தலாம்.
- பாதுகாப்பு காரணமாக வீடியோ பதிவு அல்லது லைவ் ஸ்ட்ரீம் செய்தால் LED விளக்கு காண்பிக்கப்படும்.
இந்த ஸ்மார்ட் கண்ணாடிகள், நவீன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியாக கருதப்படுகிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்காக இவை முழுமையாக ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Meta AI glasses India launch, Ray-Ban smart glasses price, Meta AI glasses features, Ray-Ban Meta specs India, Smart glasses under 30000, AI wearable gadgets India, Ray-Ban Meta AI voice control, Live streaming smart glasses, Ray-Ban Meta India models, Meta AI glasses battery life