அம்பானியின் ஆண்ட்லியா வீட்டிற்கு பிறகு…இந்தியாவிலேயே 2வது பெரிய வீடு யாருடையது தெரியுமா?
முகேஷ் அம்பானிக்கு பிறகு கவுதம் சிங்கானியா தான் இந்தியாவில் உள்ள 2வது மிகப்பெரிய வீட்டுக்கு சொந்தக்காரர் ஆவார்.
கவுதம் சிங்கானியா
இந்தியாவில் புகழ்பெற்ற தொழிலதிபர்களில் ஒருவராக ரேமண்ட்ஸ் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான கவுதம் சிங்கானியா(gautham singhania) பார்க்கப்படுகிறார்.
இவரது ரேமண்ட்ஸ் நிறுவனத்தின் ஆடைகள் இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளில் சிறப்பான முறையில் விற்பனையாகி வருகிறது.
பெரும்பாலான இந்தியர்களால் அறியப்பட்ட தொழிலதிபர் கவுதம் சிங்கானியாவுக்கு மும்பை நகரில் மிகவும் பிரம்மாண்டமான வீடு ஒன்று உள்ளது.
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் பதினைந்தாயிரம் கோடி மதிப்புள்ள ஆண்ட்லியா வீடு தான் இந்தியாவிலேயே மிகவும் பிரம்மாண்டமான மற்றும் விலை உயர்ந்த வீடாக அறியப்படுகிறது.
இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள தொழிலதிபர் கவுதம் சிங்கானியாவின் JK House என அழைக்கப்படும் வீடு இந்தியாவின் இரண்டாவது பெரிய மற்றும் மதிப்பு மிக்க வீடாக கருதப்படுகிறது.
JK House
டைம்ஸ் பத்திரிகையின் தகவல்படி, மும்பையில் சுமார் 16 ஆயிரம் சதுர அடியில் 30 மாடிகளுடன் JK House கட்டப்பட்டுள்ளது.
இந்த JK House-ல் இரண்டு ஸ்விம்மிங் பூல்கள், ஸ்பா, ஹெலிபேட் போன்றவை இடம்பெற்றுள்ளது.
அத்துடன் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அவரது குடும்பத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அருங்காட்சியகம் ஒன்று அதில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் JK House-ன் முன்புறம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள சலவை கற்களின் விதம் இந்த வீட்டை மும்பையில் குறிப்பிடத்தக்க இடங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.
தொழிலதிபர் கவுதம் சிங்கானியாவின் தாத்தா கைலாஷ் பத் சிங்கானியாவின் பெருமைகளை நினைவூட்டும் விதமாக அவருடைய சிலை ஒன்றும் இந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கார்கள் மற்றும் ஜெட் விமானங்கள்
இந்த பிரம்மாண்ட வீடு உடன் கவுதம் சின்கானியாவிடம் விலை உயர்ந்த லோட்டஸ் எலிஸ் கன்வெர்டிபிள், ஆடி Q7, லாம்போர்கினி கலார்டோ LP570 சூப்பர் லெக்கீரா, ஃபெராரி 458 Italia, நிஸ்ஸான் ஸ்கைலைன் GTR, ஹோண்டா S2000 ஆகிய கார்கள் உள்ளன.
மேலும் அவருக்கென இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் 150 கோடி மதிப்புள்ள பம்பார்டியர் சேலன்ஜர் 600 என்ற ஜெட் விமானமும் கவுதம் சிங்கானியா சொந்தமாக வைத்துள்ளார்.
இத்துடன் சேர்த்து கவுதம் சிங்கானியாவிடம் 10 உல்லாச படகுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |