புலம்பெயர்ந்தோருக்கான விசா விதிகளை மாற்றுவது தவறு: பிரித்தானிய முன்னாள் துணைப் பிரதமர்
ஏற்கனவே பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோருக்கான விசா விதிகளை மாற்றுவது தவறு என பிரித்தானிய முன்னாள் துணைப் பிரதமரான ஏஞ்சலா ரெய்னர் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
ஏமாற்றமடைந்துள்ள வெளிநாட்டுப் பணியாளர்கள்
வெளிநாட்டுப் பணியாளர்கள் பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தால், அதன் பின் காலவரையறையின்றி பிரித்தானியாவில் வாழ தகுதி பெறலாம் என இருந்த விதியை மாற்றி, இனி 10 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம் என புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிமுகம் செய்துள்ளார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத்.

விடயம் என்னவென்றால், பிரித்தானியாவில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வாழ்ந்துவிட்ட ஏராளமானோர், விரைவில் தங்களுக்கு காலவரையறையின்றி வாழ அனுமதி கிடைக்கும் என நம்பியிருந்த நிலையில், ஷபானா அறிமுகம் செய்த புதிய விதிகள் அந்த நிலையை மாற்றியுள்ளதால், கடும் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளார்கள்.
பிரித்தானிய முன்னாள் துணைப் பிரதமர் விமர்சனம்
இந்நிலையில், ஏற்கனவே பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் புலம்பெயர்ந்தோருக்கான விசா விதிகளை மாற்றுவது தவறு என்று கூறியுள்ளார் பிரித்தானிய முன்னாள் துணைப் பிரதமரான ஏஞ்சலா ரெய்னர்.

இப்படி வெளிநாட்டுப் பணியாளர்களை 15 ஆண்டுகள் வரை காத்திருக்கச் செய்வது பிரித்தானியாவின் கொள்கைகளுக்கு உகந்தது அல்ல என்றும், நம் நாட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பைச் செய்த புலம்பெயர்ந்தோரை புதிய கட்டுப்பாடுகள் பாதிக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார் ஏஞ்சலா.
ஏற்கனவே போதுமான காலம் பிரித்தானியாவில் வாழ்ந்து, பெரிய அளவில் நாட்டுக்கு பங்களிப்பும் செய்தவர்கள் பிரித்தானியாவில் குடியமர்வதை பாதிக்கும் வகையில் எந்த விதி மாற்றங்களும் இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார் ஏஞ்சலா.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |