வங்கி கணக்கு இல்லாமலே UPI மூலம் பணம் அனுப்பலாம் - ரிசர்வ் வங்கி ஒப்புதல்
இந்தியாவில் நாளுக்கு நாள் UPI பணப்பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. பெட்டிக்கடைகள் தொடங்கி, வணிக வளாகங்கள் வரையில் மக்கள் UPI மூலம் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
UPI செயலியுடன் நாம் வங்கி கணக்கை இணைத்து அதன் மூலம், பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
வங்கி கணக்கு இல்லாமலே UPI

தற்போது, வங்கி கணக்கு இல்லாமலே குழந்தைகள் மற்றும் சிறார்கள் UPI மூலம் பணம் அனுப்பும் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ஜூனியா பேமென்ட்ஸ் (lJunio Payments Pvt Ltd) என்ற நிறுவனம் இதற்கான கொள்கை ஒப்புதலை பெற்றுள்ளது.
இதில், வங்கி கணக்கு இல்லாத குழந்தைகள் மற்றும் சிறார்கள் UPI கணக்கு தொடங்கி வழக்கம் போல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
இந்த வாலாட்டில் அவர்களின் பெற்றோர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பிக்கொள்ளலாம். மேலும் எவ்வளவு செலவு என்ற வரம்பையும் பெற்றோர்கள் நிர்ணயித்து கொள்ளலாம்.
இது இளம் வயதிலே பணத்தை பொறுப்பாக கையாளுவது, பாதுகாப்பான பணபரிமாற்றத்தை கற்றுக்கொடுக்கும் என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |