இதுக்கெல்லாம் பணம் அனுப்ப இனி OTP தேவையில்லை: RBI புது அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பேமென்ட் நடைமுறைகளில் முக்கியமான ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது.
இனி OTP தேவையில்லை
குறிப்பிட்ட வரம்பு வரையிலான பணத்தை அனுப்பும் போது இனி நாம் OTP கொடுக்கத் தேவையில்லை என தெரிவித்து இருக்கிறது.

பொதுவாக நாம் நெட்பிளிக்ஸ் போன்ற OTT சந்தா, டிடிஹெச் ரீசார்ஜ், ஜிம் சந்தா, மியூச்சுவல் ஃபண்டு எஸ்ஐபி போன்றவற்றுக்கு எல்லாம் auto payment எனப்படும் தானாகவே நம் கணக்கில் இருந்து பணத்தை டெபிட் செய்து கொள்ளும் வசதியை enable செய்து வைத்திருப்போம்.
இவ்வாறு ஒவ்வொரு மாதமும் பணம் டெபிட் செய்யப்படும் போதும் ஓடிபி கேட்கப்படுகிறது. நாம் ஓடிபி கொடுக்க தவறிவிட்டால் அல்லது மறந்துவிட்டால் அந்த மாதம் இந்த கட்டணங்கள் செலுத்த படாமல் போகலாம்.
இதனைக் கருத்தில்கொண்டு தற்போது ஆட்டோ பேமெண்ட் முறையில் 15 ஆயிரம் ரூபாய் வரையிலான ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகளுக்கு இனி ஓடிபி தேவை இல்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
உதாரணமாக நீங்கள் மாதந்தோறும் எஸ்ஐபி முறையில் பணத்தை முதலீடு செய்கிறீர்கள் அது பதினைந்தாயிரம் ரூபாய் வரைக்குள் தான் இருக்கிறது ஒவ்வொரு மாதமும் அந்த பணம் டெபிட் செய்யப்படும் போது உங்களிடம் otp கேட்கப்படுகிறது என்றால் இனி நீங்கள் ஓடிபி கொடுக்க தேவையில்லை.
அது தானாகவே உங்களின் கணக்கிலிருந்து டெபிட் ஆகிவிடும். இதற்கேற்ற வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக e mandate விதிமுறைகளை மாற்றி அறிவித்திருக்கிறது.
1 லட்சம் ரூபாய் வரை
எனவே சந்தா கட்டணங்கள், முதலீடுகள் உள்ளிட்டவற்றை விரைவாகவும் எளிமையாகவும் செலுத்த முடியும். 15 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே ஒடிபி இல்லை என்ற விதிமுறை பொருந்தும், 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செல்லும்போது கட்டாயம் நீங்கள் ஓடிபி கொடுக்க வேண்டியது இருக்கும்.
அதேபோல காப்பீடு பிரிமியங்கள், கிரெடிட் கார்டு பில் பேமென்ட்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை ஓடிபி இல்லாமலேயே ஆட்டோ டெபிட் செய்து கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

யுபிஐ செயலிகள், இண்டர்நெட் பேங்கிங் போன்றவற்றில் இதனை enable செய்து கொள்ளலாம் எப்போது வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் அதனை கேன்சல் செய்யலாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பணம் உங்களுடைய கணக்கில் இருந்து எடுக்கப்படுவதற்கு முன்னதாக எஸ்எம்எஸ் முறையில் உங்களுக்கு ஃப்ரீ டெபிட் அலட்ர்ட்டுகள் வரும்.
24 மணி நேரத்திற்கு முன்பாகவே இந்த எச்சரிக்கை மெசேஜ்கள் வரும் என்பதால் வாடிக்கையாளருக்கு எதற்கு தன்னுடைய கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது என்ற விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |