Kotak Mahindra வங்கிக்கு அதிர்ச்சி கொடுத்த RBI., இந்த இரு சேவைகளை நிறுத்த உத்தரவு
கோடக் மஹிந்திரா வங்கிக்கு (Kotak Mahindra Bank) ரிசர்வ் வங்கி (RBI) புதன்கிழமை அதிர்ச்சி அளித்துள்ளது.
ஓன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் சேனல்கள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதை நிறுத்துமாறு RBI உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம் கடன் அட்டை (Credit Card) வழங்குவதை உடனடியாக நிறுத்தவும் உத்தரவிடப்பட்டது.
தற்போதுள்ள கிரெடிட் கார்டுகளுடன் வாடிக்கையாளர்களுக்கான சேவைகள் வழக்கம் போல் தொடரலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கோடக் மஹிந்திரா வங்கியின் தகவல் தொழில்நுட்ப இடர் மேலாண்மை மற்றும் தகவல் பாதுகாப்பு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2022-23 நிதியாண்டிற்கான ஐடி தணிக்கையில் கண்டறியப்பட்ட குறைபாடுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த பிழைகள் மற்றும் சிக்கல்களை தீர்க்க வங்கி தவறிவிட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப ஆபத்து மற்றும் தகவல் பாதுகாப்பு நிர்வாகத்திற்கான வழிகாட்டுதல்களை வங்கி இரண்டு ஆண்டுகளாக பின்பற்றவில்லை என ரிசர்வ் வங்கி கூறியது.
இந்த உத்தரவின் பேரில் வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Kotak Mahindra Bank, Reserve Bank of India, RBI ban Kotak Mahindra Bank