இனி UPI மூலம் பணம் அனுப்ப கட்டணமா? ரிசர்வ் வங்கி ஆளுநர் அதிர்ச்சி தகவல்
UPI மூலம் பணம் அனுப்ப கட்டணம் விதிப்பது குறித்த தகவலை ரிசர்வ் வங்கி ஆளுநர் பகிர்ந்துள்ளார்.
UPI பரிவர்த்தனை
டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத மனிதரை காண்பது அரிதிலும் அரிது. குண்டூசி வாங்குவதில் இருந்து தங்கம் வாங்கும் வரை, ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மக்கள் மாறி விட்டனர்.
Google pay, PhonePe போன்ற செயலிகள் மூலம் QR Code ஸ்கேன் செய்து, நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். கடந்த 2 ஆண்டுகளில், UPI பரிவர்த்தனைகள் இரு மடங்கு உயர்ந்துள்ளது.
தினமும் 600 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. கடந்த ஜூன் மாதம் மட்டும் ரூ.24.03 லட்சம் கோடி அளவுக்கு UPI பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது.
முன்னதாக UPI பரிவர்த்தனைக்கு GST கட்டணம் விதிக்கப்பட உள்ளதா என நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அப்படி எந்த திட்டமும் இல்லை என அரசு பதிலளித்தது.
ரிசர்வ் வங்கி ஆளுநர்
இந்நிலையில் தனியார் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா, UPI பரிவர்த்தனைக்கு எதிர்காலத்தில் கட்டணம் விதிக்கப்படலாம் என சூசகமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், "UPI சேவையில் தற்போது எந்த கட்டணமும் இல்லை. UPI கட்டண முறையில் வங்கிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கி அதற்கான செலவை செலுத்தி வருகிறது.
ஆனால் நீண்ட நாட்களுக்கு இது தொடர முடியாது. இதற்கான செலவை கூட்டாகவோ அல்லது பயனர்களோ ஏற்றாக வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |