அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய Mobile App அறிமுகம்: RBI
இனிமேல் முதலீட்டாளர்கள் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வது எளிதாக இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி சில்லறை முதலீட்டாளர்களுக்காக G-Sec எனும் மொபைல் செயலியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
நவம்பர் 2021-இல், ரிசர்வ் வங்கி அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான 'சில்லறை நேரடி' திட்டத்தைக் (Retail Direct Scheme) கொண்டு வந்தது.
ரிசர்வ் வங்கியின் நேரடி போர்டல் மூலம் முதலீட்டாளர்கள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்கள் இந்த அரசாங்கப் பத்திரங்களை ஏலத்தில் வாங்கவும் விற்கவும் முடியும்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், சில்லறை நேரடி போர்ட்டல், அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு வசதியாக மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தும் என்று கூறியுள்ளார். இந்த app விரைவில் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Reserve Bank of India, RBI, RBI mobile application, RBI's G-sec App, Retail Direct Scheme, investing in government securities