4 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு; உயரப்போகும் கடன்கள்
rbi hikes repo rate after 4 years, loan emi to rise: இந்தியாவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது, கடன் பெற்றவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வு
மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், 5.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 25 புள்ளிகளை உயர்த்தி 5.50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் ஆகும்.
2023 பிப்ரவரிக்கு பின்னர் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார சூழல் காரணமாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரெப்போ வட்டி உயர்வால், புதிதாக கடன் வாங்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி விகிதம் விதிக்க வாய்ப்புள்ளது.
மாறுபடும் வட்டி விகிதத்தில் கடன் பெற்றவர்களுக்கு, சம்பந்தப்பட்ட வங்கிகள் மாதாந்திர தவணை தொகையை(EMI) உயர்த்தலாம். அல்லது மாதாந்திர தவணை செலுத்தும் காலத்தை நீட்டிக்கலாம்.