Fixed Deposit செய்தவர்கள் உஷார்! புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரிசர்வ் வாங்கி
இந்திய ரிசர்வ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் விதிமுறைகளை திருத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, ஒரு வாடிக்கையாளர் முதிர்ச்சியடைந்த பின்னரும் கூடஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) பணத்தை கோரவில்லை என்றால், அவர்கள் சேமிப்பு வட்டி அடிப்படையில் இழப்பைச் சந்திக்க நேரிடலாம்.
இருப்பினும், டெபாசிட் தொகை (Term Deposit) மெச்சூரிட்டி அடைந்தபிறகும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி வருமானம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெபாசிட் திட்டங்கள் மெச்சூரிட்டி அடைந்தபின் பணத்தை பெறப்படாவிட்டால், சேமிப்பு டெபாசிட்டுக்கு (Savings Deposit) வழங்கப்படும் வட்டி விகிதத்தில் வருமானம் கிடைக்கும். அல்லது, டெபாசிட் ஒப்பந்தத்தில் உள்ள விகிதத்துக்கு வட்டி கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஆனால், இவை இரண்டில் எது குறைந்த வட்டியை கொண்டுள்ளதோ, அதனை வங்கியே தேர்வு செய்து, குறைந்த வட்டியை வாடிக்கையாளருக்கு கொடுக்கும்.
இப்புதிய விதிமுறைகள் அனைத்து வர்த்தக வங்கிகள், சிறு சேமிப்பு வங்கிகள், உள்ளூர் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தும்.
வங்கிகளில் பெற்றுக்கொள்ளாமல் (unclaimed) கிடக்கும் டெபாசிட்டுகளின் எண்ணிக்கை ஒவ்வொறு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், டெபாசிட் திட்டங்கள் மெச்சூரிட்டிக்கு பின்பும் வட்டி கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.