இனி ஒன்லைன் மோசடிக்கு வாய்ப்பில்லை! Credit Card தொடர்பில் வந்துவிட்டது புதிய விதி
ஒன்லைன் பணப்பரிவர்த்தனை, பணப்பரிமாற்ற மோசடிகளை தடுக்க RBI புதிய விதிகளை அமுல்படுத்த உள்ளது.
டிஜிட்டல் மோசடி
Credit Card, Debit Card பயன்பாடு அதிகமுள்ள நிலையில் பண பரிவர்த்தனை, பண பரிமாற்றம் ஆகியவற்றில் டிஜிட்டல் மோசடி அதிகரித்துவிட்டது.
எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என RBI புதிய விதியை கொண்டுவந்துள்ளது. அதன்படி, Credit Card மற்றும் Debit Card ஆகியவற்றின் தகவல்களை வைத்திருத்தல் தொடர்பான விதி, 2025ஆம் ஆண்டின் ஆகத்து 1 முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கி பண பரிவர்த்தனையின் பொழுது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் Credit Card, Debit Card பற்றிய தகவல்களை பணம் செலுத்தும் நிறுவனங்கள் சேமித்து வைக்காமல் இருக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் வாடிக்கையாளர்கள் பண பரிமாற்றம் செய்யும்போது ஏதுவான வகையில் செயல்முறைகளை எளிதாக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய விதி
புதிய விதிகளின்படி, எந்த ஒரு பணம் செலுத்தும் நிறுவனமும் வாடிக்கையாளர்களின் Credit Card மற்றும் Debit Card தகவல்களை சேமித்து வைக்க, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரங்கள் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி 2025ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்படும் நிலையில், வாடிக்கையாளர்களின் Cards பற்றிய தகவல்கள் அவற்றை வைத்திருக்கும் நபர் மற்றும் Network ஆகியோரால் மட்டுமே அறிந்திருக்கப்படும்.
இதற்கான திட்டமிடல் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்களிடம் இருந்து இதற்கான பரிந்துரைகளோ, ஆட்சேபனைகளோ மாற்று கருத்துக்களோ ஏதேனும் இருப்பின் அவற்றை RBI வரவேற்பதாகவும், பரிந்துரைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு இதற்கான செயல் திட்டமானது நிறைவேற்றப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |