இனி வெள்ளி நகைகளை அடமானம் வைத்தும் வங்கிக் கடன் பெறலாம்: விரிவான விளக்கம்
கடன் வழங்கும் முறையை விரிவுபடுத்தும் வகையில், வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களை அடமானக் கடன்களில் சேர்க்கும் பொருட்டு ஒழுங்குமுறை கட்டமைப்பை இந்தியாவின் ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது.
அதிகபட்சமாக 10 கிலோ
இது இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய (தங்கம் மற்றும் வெள்ளி) (கடன்கள்) வழிமுறைகள், 2025 இன் இலக்கின் கீழ் உள்ளது. நவம்பர் 11, 2025 அன்று வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில், ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை விலைமதிப்பற்ற உலோகங்களை அடமானம் வைத்து கடன்கள் வழங்கும் முறையில் தங்கம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இனி, வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் என அனைத்தும் அதிகபட்சமாக 10 கிலோ வெள்ளி நகைகளுக்கும், அதிகபட்சமாக 500 கிராம் வெள்ளி நாணயத்தின் மேலும் கடன் அளிக்க முடியும்.
ஆனால், தங்க நகைகளைப் பொறுத்தமட்டில் ஒருவர் 1 கிலோ மற்றும் நாணயங்களைப் பொறுத்தமட்டில் 50 கிராம் என மட்டுமே வங்கிகளில் அடமானம் வைக்க முடியும்.
வெள்ளி நகைகளை அடமானம் வைத்து கடன் அளிப்பதன் மூலம், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் கடன் வழங்கலில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த ரிசர்வ் வங்கி மற்றும் அரசாங்கத்தின் விரிவான நடவடிக்கைகளின் ஒரு பகுதி என கூறுகின்றனர்.

வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்கள் மட்டுமே அடமானம் வைக்க முடியும், வெள்ளிப் பொருட்கள் மற்றும் வெள்ளிக் கட்டிகள் உட்படுத்தப்படவில்லை.
7 வேலை நாட்களுக்குள்
வெள்ளி நகைகள் மற்றும் நாணயங்களைப் பொறுத்தமட்டில் அதிகபட்ச கடன் மதிப்பு என்பது ரூ 2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 85%, ரூ 2.5 முதல் 5 லட்சம் கடன்களுக்கு 80% மற்றும் ரூ 5 லட்சத்திற்கு மேல் உள்ள கடன்களுக்கு 75% என விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

மேலும், முந்தைய நாள் அல்லது 30 நாள் சராசரியின் இறுதி விலையின்படி வெள்ளி அல்லது தங்கத்தின் மதிப்பு தீர்மானிக்கப்படும். கடனைத் திருப்பிச் செலுத்திய 7 வேலை நாட்களுக்குள் வெள்ளி நகைகள் அல்லது நாணயங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

ஆனால் கடன் வழங்குபவர் தாமதம் செய்தால், கடனாளிக்கு இழப்பீடாக ஒரு நாளைக்கு ரூ 5,000 என கடன் வழங்குபவர் செலுத்த வேண்டும் என்றே ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |