இந்த குறியீடு உள்ள ரூ.500 நோட்டு செல்லுமா? ரிசர்வ் வங்கியின் பதில்
2,000 ரூபாய் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது முதல் அடுத்த பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டான 500 ரூபாய் நோட்டு குறித்து தொடர்ந்து பல வதந்திகள் பரவி வருகின்றன.
எனினும், மக்கள் அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து வரும் அறிவிப்புகளைதான் நம்ப வேண்டும் என்றும் ஆதாரமற்ற வதந்திகளை நம்பக்கூடாது என்றும் இந்திய அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கியும் கூறியது.
ரூ.500 நோட்டு குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு சமீபத்தில் பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, வரிசை எண்ணின் நடுவில் நட்சத்திரம் உள்ள ரூ.500 நோட்டு உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி கூறியதாவது
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறாக அச்சிடப்பட்ட நோட்டுக்குப் பதிலாக வெளியிடப்படும் நோட்டின் நம்பர் பேனலில் நட்சத்திரக் குறி சேர்க்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது.
இந்த நட்சத்திரக் குறியைப் பார்த்து, சிலர் அதை மற்றொரு 500 ரூபாய் நோட்டுடன் ஒப்பிட்டு, இது போலி நோட்டு என்று கூறினர். இந்த வதந்தி வைரலாக பரவவே, ரிசர்வ் வங்கி இந்த தகவலை அளித்துள்ளது.
வரிசை எண்கள் கொண்ட நோட்டுக் கட்டுகளில் தவறாக அச்சிடப்பட்ட நோட்டுகளுக்குப் பதிலாக நட்சத்திரக் குறி கொண்ட நோட்டுகள் வெளியிடப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நட்சத்திரக் குறியின் பொருள்
நட்சத்திர குறியுடன் கூடிய வங்கி நோட்டு, மாற்றப்பட்ட அல்லது மறுபதிப்பு செய்யப்பட்ட நோட்டுக்குப் பதிலாக வெளியிடப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
நட்சத்திர நோட்டுகளின் போக்கு நோட்டுகளை அச்சிடுவதை எளிதாக்கவும், செலவைக் குறைக்கவும் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ரிசர்வ் வங்கி தவறாக அச்சிடப்பட்ட நோட்டுக்குப் பதிலாக அதே எண்ணின் சரியான நோட்டைப் பயன்படுத்தி வந்தது.
இரண்டு நோட்டில் ஒரே எண் இருந்தால், அவை செல்லுமா?
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி நோட்டுகள் ஒரே வரிசை எண்ணைக் கொண்டிருக்கலாம் ஆனால் அவற்றில் வெவ்வேறு உள்ளீட்டு எழுத்துக்கள் அல்லது வெவ்வேறு அச்சிடும் ஆண்டுகள் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் வெவ்வேறு கவர்னர்களின் கையெழுத்தும் இருக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி இது குறித்து கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |