எந்த ஐபிஎல் அணியும் செய்யாத சாதனையை படைத்த RCB! குவியும் பாராட்டு
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 மில்லியன் பின்தொடர்பாளர்களை பெற்ற முதல் ஐபிஎல் அணி என்ற சாதனையை RCB பெற்றுள்ளது.
RCB அணி
18 ஆண்டுகளாக ஐபிஎல் கிண்ணத்தை வெல்லாத அணி என்ற பெயருடன் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நடப்பு சீஸனில்அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ப்ளேஆப் சென்றுள்ளது.
பெங்களூரு அணி 13 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகள், 4 தோல்விகளை சந்தித்துள்ளது.
இந்த முறை நிச்சயமாக ஐபிஎல் கிண்ணத்தை பெங்களூரு அணி வெல்லும் என RCB ரசிகர்கள் மட்டுமின்றி, பிற அணிகளின் ரசிகர் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) சமூக வலைதள ஊடகத்தில் புதிய சாதனை படைத்துள்ளது.
20 மில்லியன்
அதாவது, பிரபல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 மில்லியன் பின்தொடர்பாளர்களை (Followers) பெற்ற முதல் அணி என்ற பெங்களூருதான்.
இதற்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (18.6 மில்லியன்), மும்பை இந்தியன்ஸ் (18 மில்லியன்) ஆகிய அணிகள் உள்ளன.
RCB ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். அத்துடன் பல தரப்பு கிரிக்கெட் ரசிகர்களும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |