கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு: ரூ 25 லட்சம் வழங்கும் RCB
ஐபிஎல் வெற்றிக் கொண்டாத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சார்பில் ரூ.25 லட்சம் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல்
கடந்த ஜூன் 4ஆம் திகதி அன்று RCB அணி கிண்ணத்தை வென்ற வெற்றிக் கொண்டாத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி ஒரு உணர்ச்சிப்பூர்வமான அறிக்கையை RCB வெளியிட்டுள்ளது. அதில், "ஜூன் 4, 2025 அன்று எங்கள் இதயங்கள் உடைந்தன. RCB குடும்பத்தைச் சேர்ந்த 11 உறுப்பினர்களை நாங்கள் இழந்தோம். அவர்கள் எங்களில் ஒரு பகுதியாக இருந்தனர். எங்கள் நகரம், எங்கள் சமூகம் மற்றும் எங்கள் அணியை தனித்துவமாக்குவதில் ஒரு பகுதி. அவர்கள் இல்லாதது எங்கள் ஒவ்வொருவரின் நினைவுகளிலும் எதிரொலிக்கும்" என கூறப்பட்டுள்ளது.
நிதி உதவியாக மட்டுமல்ல
மேலும், "எந்தவொரு ஆதரவும் அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது. ஆனால் முதல் படியாகவும், ஆழ்ந்த மரியாதையுடனும், RCB அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளது. நிதி உதவியாக மட்டுமல்ல, இரக்கம், ஒற்றுமை மற்றும் தொடர்ச்சியான கவனிப்புக்கான வாக்குறுதியாகும்.
இது RCB CARESயின் தொடக்கம் ஆகும்: அவர்களின் நினைவைப் போற்றுவதன் மூலம் தொடங்கும் அர்த்தமுள்ள செயலுக்கான நீண்டகால உறுதிப்பாடு. ஒவ்வொரு அடியும் ரசிகர்கள் என்ன உணர்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள், தகுதியானவர்கள் என்பதைப் பிரதிபலிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
𝗥𝗖𝗕 𝗖𝗮𝗿𝗲𝘀: 𝗢𝗳𝗳𝗶𝗰𝗶𝗮𝗹 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁
— Royal Challengers Bengaluru (@RCBTweets) August 30, 2025
Our hearts broke on June 4, 2025.
We lost eleven members of the RCB family. They were part of us. Part of what makes our city, our community & our team unique. Their absence will echo in the memories of each one of… pic.twitter.com/1hALMHZ6os
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |