டெல்லி கேபிட்டல்ஸை தட்டித் தூக்கிய RCB
பெங்களூருவில் நடந்த ஐபிஎல் போட்டியில் RCB அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.
சிக்ஸர்களை பறக்கவிட்ட கோலி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது.
முதலில் களமிறங்கிய RCB அணியில் பாப் டூ பிளெஸ்ஸிஸ் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சிக்ஸர்களை பறக்கவிட்ட கோலி 27 (13) ஓட்டங்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
Convincing stroke play ft Rajat Patidar and Will Jacks ?#RCB with some big overs in between courtesy of this duo ??
— IndianPremierLeague (@IPL) May 12, 2024
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia ??#TATAIPL | #RCBvDC | @RCBTweets pic.twitter.com/jxjOZcIKUo
எனினும், வில் ஜேக்ஸ் மற்றும் ரஜத் பட்டிடார் அதிரடியில் மிரட்டினர். இதன்மூலம் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
பட்டிடார் அரைசதம்
அரைசதம் விளாசிய பட்டிடார் 32 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசினார். வில் ஜேக்ஸ் 41 (29) ஓட்டங்களில் வெளியேற, கிரீன் ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
Sublime Sixes of Virat Kohli ?
— IndianPremierLeague (@IPL) May 12, 2024
Watch ? #TATAIPL | #RCBvDC
இதன்மூலம் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது. கலீல் அகமது, ராசிக் சலாம் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
போராடிய அக்சர் படேல்
பின்னர் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அணித்தலைவர் அக்சர் படேல் மட்டும் அணியை மீட்க போராடினார்.
5️⃣0️⃣ for the #DC skipper ?
— IndianPremierLeague (@IPL) May 12, 2024
Axar Patel continues to fight from the one end ?
Can he guide his team home despite losing partners at the other end? ?
Follow the Match ▶️ https://t.co/AFDOfgLefa#TATAIPL | #RCBvDC pic.twitter.com/jydcM6fPEZ
எனினும் டெல்லி அணி 19.1 ஓவரில் 140 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அக்சர் படேல் 39 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்தார். பெங்களூரு அணி தரப்பில் யஷ் தயாள் 3 விக்கெட்டுகளும், பெர்குசன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Wrapped up in style ⚡️
— IndianPremierLeague (@IPL) May 12, 2024
High fives ? all around as #RCB make it FIVE ?️ in a row ?
A comfortable 4️⃣7️⃣-run win at home ?
Scorecard ▶️ https://t.co/AFDOfgLefa#TATAIPL | #RCBvDC pic.twitter.com/qhCm0AwUIE
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |