2 வாரங்களில் CSKவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த RCB
ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாடினாலும், அதில் சில அணிகளுக்கே நாடு முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.
ஐபிஎல் அணிகள்
இதில், 5 முறை கோப்பை வென்ற அணிகளான சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு பெரிய ரசிகர் படை உண்டு.
அதே போல் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத RCB அணிக்கும் இந்த அணிகளுக்கு நிகரான ரசிகர்கள் உண்டு.
அந்த அணிகளில் தோனி(சென்னை), கோலி(பெங்களூரு), ரோஹித் சர்மா(மும்பை) போன்ற ஜாம்பவான்கள் விளையாடுவதும் இதற்கு முக்கிய காரணமாகும்.
18வது ஐபிஎல் தொடரில், முன்னாள் சாம்பியன்களான மும்பை மற்றும் சென்னை அணிகள் 3 போட்டிகளில் விளையாடி 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில், விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
CSKவை முந்திய RCB
இதே போல் இன்ஸ்டாகிராமிலும் பெங்களூரு அணி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
2 வாரங்களுக்கு முன்னர், சென்னை அணி இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் 17 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்று, 17 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள முதல் ஐபிஎல் என்ற சாதனையை படைத்துள்ளது.
தற்போது பெங்களூரு அணி 17.9 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்று, சென்னையை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டுள்ள அணி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.
அதே வேளையில், X தளத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள ஒரே அணி என்ற பெருமையை CSK அணி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |