சிக்ஸர் விளாசல்.. கேட்ச் பிடித்து அவுட் செய்தவருக்கு கை கொடுக்க மறுத்த வீரர்! வைரல் வீடியோ
ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் ஹர்ஷல் பட்டேல், தனது ஓவரில் சிக்ஸர் விளாசிய ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராகிற்கு கை கொடுக்க மறுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டியில், ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் 31 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் விளாசினார்.
குறிப்பாக, பெங்களூரு அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட பராக், அந்த ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். அதன் பின்னர் ஓவர் முடிந்ததும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
This was after 2 sixes were hit off the last over pic.twitter.com/qw3nBOv86A
— ChaiBiscuit (@Biscuit8Chai) April 26, 2022
பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட பராக் 4 கேட்ச்களை பிடித்தார். அதில் ஒன்று கடைசி விக்கெட்டான ஹர்ஷல் பட்டேலின் கேட்ச். அத்துடன் போட்டி முடிந்தது.
இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு அனைத்து வீரர்களும் கை கொடுப்பது வழக்கம். அதன்படி பராக் கை கொடுக்க வரும் போது ஹர்ஷல் பட்டேல் அவருக்கு கை கொடுக்காமல் சென்று விடுவார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
One Young Talent Jealous Of Other.
— JAYAKRISHNA (@ImJK_117) April 27, 2022
Very #Unsportive Behaviour From Harshal Patel. Keep Going Riyan Parag @rajasthanroyals @RCBTweets @IPL pic.twitter.com/Sg0Pv2pfSC