RCB அணியிடமும் ஒரு கோப்பை உள்ளது - அணித்தலைவர் ரஜத் படிதார் பெருமிதம்
எங்களது மகளிர் அணி கோப்பையை வென்றது உத்வேகமாக உள்ளதாக அணித்தலைவர் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.
RCB vs KKR
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மே 17 ஆம் திகதி தொடங்கி ஜூன் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற உள்ள போட்டியில், RCB மற்றும் KKR அணிகள் மோத உள்ளது. பெங்களூருவில் கனமழை பெய்து வருவதால், போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் இதுவரை 17 ஐபிஎல் தொடர்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், RCB அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாத அணியாக உள்ளது.
RCB மகளிர் கோப்பை
சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 கோப்பைகள் வென்றுள்ள நிலையில், RCB ஆண்கள் அணி ஒரு முறை கூட கோப்பையை வெல்லாதது குறித்தும் மகளிர் கோப்பை மட்டுமே உள்ளது குறித்தும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்வது உண்டு.
Rajat doing just what needs to be done here "WE ARE NOT TROPHYLESS " 😭🤚pic.twitter.com/h5Td9jyqMa
— Flavia (@FlaviaNagpal) May 16, 2025
இந்நிலையில், RCB கோப்பை வெல்லாதது குறித்து பேசிய அந்த அணியின் அணித்தலைவர் ரஜத் படிதார், "RCB அணியிடம் கோப்பை இல்லை என யாரும் சொல்ல முடியாது. எங்களது மகளிர் அணி கோப்பையை வென்றுள்ளார்கள். அது எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
மகளிர் பிரீமியம் லீக்கில்(WPL), 2024 ஆம் ஆண்டு சுமிருதி மந்தனா தலைமையிலான RCB மகளிர் அணி கோப்பையை வென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |