ஐபிஎல் வரலாற்றில் ஒரே மைதானத்தில்..100 போட்டிகள் விளையாடிய அணி எது தெரியுமா?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரே மைதானத்தில் 100 போட்டிகளில் விளையாடும் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
நடப்பு சாம்பியன் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.

இந்தப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்த மைதானத்தில் 100வது போட்டியாகும்.
இதன்மூலம் ஒரே மைதானத்தில் 100 போட்டிகளில் விளையாடும் முதல் ஐபிஎல் அணி என்ற சாதனையை பெங்களூரு படைத்துள்ளது.
முதல் போட்டி
2008ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதி, RCB அணி தனது முதல் போட்டியை இந்த மைதானத்தில் விளையாடியது.
இந்த 19 ஆண்டுகளில் பெங்களூரு அணி, சின்னசாமி மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோராக 2013யில் 263 பதிவு செய்துள்ளது. மொத்தம் 48 வெற்றிகளையும், 46 தோல்விகளையும் RCB அணி இந்த மைதானத்தில் கண்டுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அடுத்தபடியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடன் கார்டன் மைதானத்தில் 98 போட்டிகள் விளையாடியுள்ளது.
அடுத்து மும்பை இந்தியன்ஸ் மைதானத்தில் சொந்த மைதானமான வான்கடேயில் 95 போட்டிகள் விளையாடியுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |