IPL வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த RCB
நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 14வது ஐபிஎல் லீக் போட்டியில், பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் மோதியது.
தோல்வியை தழுவிய RCB
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு, 169 ஓட்டங்கள் எடுத்தது.
பெங்களூரு சார்பில், அதிகபட்சமாக லிவிங்ஸ்டோன் 54 ஓட்டங்கள் குவித்தார். குஜராத் தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
தொடர்ந்து 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 170 ஓட்டங்கள் குவித்து, அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 39 பந்துகளில், 73 ஓட்டங்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மோசமான சாதனை
2025 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தனது முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.
இந்த தோல்வியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. பெங்களூரு அணியின் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் இது 44வது தோல்வியாகும்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக தோல்விகளைப் சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை பெங்களூரு சமன் செய்துள்ளது.
இதே போல், டெல்லி அணியும் தங்களது சொந்த ஊரில் உள்ள டெல்லி மைதானத்தில் 44 தோல்விகளை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |