விராட் கோலி எதிரணிகளுக்கு மிகவும் ஆபத்தானவர்: எச்சரிக்கும் அவுஸ்திரேலிய வீரர்!
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மிகவும் ஆபத்தானவராக இருப்பார் என அந்த அணியின் அவுஸ்ரேலிய வீரர் கிளைன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஐபிஎல் போட்டி தொடர் இந்த மாதம் 26ம் திகதி மும்பையில் தொடங்கவுள்ளது. இதில் 27ம் திகதி நடைபெறும் பேட்டியில் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.
இந்த நிலையில், பெங்களூரு அணியின் அதிரடி வீரர் கிளைன் மேக்ஸ்வெல் அளித்துள்ள பேட்டியில் , அந்த அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் இதனை ஆண்டுகால கேப்டன் பொறுப்பானது விராட் கோலிக்கு மிகப்பெரிய சுமையாக இருந்து இருக்கும், ஆனால் இனி வரும் போட்டிகளில் அத்தகைய எந்தவொரு சுமையும் இல்லாததால் விராட் கோலி எதிரணிகளுக்கு மிகவும் ஆபத்தானவராக இருப்பார் என தெரிவித்துள்ளார்.
அவருக்கு எதிராக விளையாடிய ஆரம்பகட்டத்தில் மிகவும் ஆக்ரோஷமான எதிராளியாக தென்பட்டார். அதேசமயம் இணைந்து விளையாடும் போது அவருடனான உரையாடல்கள் உண்மையிலேயே சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் விராட் கோலி எப்போதுமே ஆட்டத்தை தனக்குள் எடுத்துக்கொண்டு விளையாட முயற்சிப்பார், இந்த ஆண்டில் விராட் கோலி விளையாடிய சர்வதேச ஆட்டங்களில் அவர் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டதையும் முடிவுகள் எடுப்பதில் கட்டுக்கோப்புடன் இருந்ததையும் பார்க்க முடிந்தது, இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது எனவும் அவுஸ்ரேலிய வீரர் கிளைன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய வீரர் கிளைன் மேக்ஸ்வெல் இந்த கருத்தானது, இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல்-யின் 15வது சீசனில் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலி பெங்களூரு அணியின் கேப்டன் பதிவில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக சென்னை அணியின் முன்னாள் முன்னணி வீரரான பாப் டு பிளிஸ்சிஸ் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.