IPL Playoff; RCB அணியில் இருந்து விலகும் பில் சால்ட்?
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு, பஞ்சாப், குஜராத், மும்பை ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
வரும் 29 ஆம் திகதி முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடங்க உள்ளன.
இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத RCB அணி, இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
விலகும் பில் சால்ட்?
இந்நிலையில், பிளே ஆஃப் தொடரில் RCB அணியின் முக்கிய வீரரான பில் சால்ட் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
அவரின் நீண்டகால காதலியான அபி மெக்லாவனுடன் அவர் 2020 ஆம் ஆண்டு ஒன்றாக வசித்து வருகிறார்.
மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் அவர் குழந்தை பெற உள்ள நிலையில், பில் சால்ட் நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடக சந்தைப்படுத்தல், வணிக ஆலோசனை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற அபி மெக்லாவன், மெய்நிகர் உதவியாளராக செயல்பட்டு வருகிறார்.
ஏற்கனவே உடல்நலக்குறைவு காரணமாக பில் சால்ட் இரு போட்டிகளில் கலந்து கொள்ளாத நிலையில், அவருக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல் விளையாடினார்.
தற்போது ஜேக்கப் பெத்தேலும், மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியில் விளையாட செல்வதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக டிம் சீஃபர்ட்டை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில், 9 போட்டிகளில் விளையாடியுள்ள பில் சால்ட், 168.31 என்ற ஸ்ட்ரைக் ரேட் உடன் 239 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |