11 ஆண்டுகளுக்கு முன் டிவில்லியர்ஸ் செய்த மறக்க முடியாத சம்பவம் - நெகிழும் ரசிகர்கள்
பெங்களூரு அணி கடந்த 2011 ஆம் ஆண்டு இதே மார்ச் மாதத்தில் டிவில்லியர்ஸ் ஆடிய ருத்ரதாண்டவ ஆட்டம் குறித்து ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளது.
அப்படி என்ன ஸ்பெஷல் என்று தானே நினைக்கிறீர்கள். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பையை 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா தட்டி தூக்கியது. அந்தத் தொடரில் பி பிரிவில் இடம் பெற்ற தென்னாப்பிரிக்கா அணி மார்ச் மாதம் 3 ஆம் தேதி நெதர்லாந்த்தை எதிர்கொண்டது. மொஹாலியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க வீரர்கள் நெதர்லாந்து பந்துவீச்சை விளாசி தள்ளினர். ஹாசிம் ஆம்லா 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் பொறுப்பை கையில் எடுத்த டிவில்லியர்ஸ் அபாரமாக ஆடி 134 (98) ரன்கள் விளாசினார். இதனால் 50 ஓவர் முடிவில் அந்த அணி 351 ரன்களை குவித்தது.
#OnThisDay in 2️⃣0️⃣1️⃣1️⃣, ? scored his 1️⃣1️⃣th ODI century, getting 1️⃣3️⃣4️⃣(98) and leading ?? to a massive 2️⃣3️⃣1️⃣ run win against ?? in the World Cup at Mohali. ???#PlayBold #WeAreChallengers pic.twitter.com/lbxoHvHBod
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 3, 2022
இந்த ஆட்டத்தில்தென்னன்னாப்பிரிக்கா அணி 231 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடி சதமடித்த டிவில்லியர்ஸை குறிப்பிட்டு பெங்களூரு அணி செய்த ட்வீட் தற்போது வைரலாக பரவிவருகிறது.