15 கோடி கோலிக்கு... மேக்ஸ்வெலுக்கு 11 கோடி: RCB-தக்க வைக்கும் மூன்று வீரர்கள் இவர்கள் தான்
ஐபிஎல் தொடரில் அடுத்தாண்டிற்கான வீரர்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை பெங்களூரு அணி அறிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு மிகப் பெரிய அளவில் நடைபெறவுள்ளது. ஏனெனில் புதிதாக இரண்டு அணிகள் வரவுள்ளதால், மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடர் துவங்கவுள்ளது.
இதன் காரணமாக மெகா ஏலம் நடைபெறவுள்ளது. அதற்காக முன்பு இருக்கும் 8 அணிகள் நான்கு வீரர்களை தக்க வைத்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
அதன் படி அதற்கான கடைசி நாள் இன்று தான் என்பதால், ஒவ்வொரு அணியும் தாங்கள் வைத்து கொள்ளும் வீரர்களின் பட்டியலை அறிவித்து வருகிறது.
இதில் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதால், பெங்களூரு அணி விராட் கோஹ்லியை 15 கோடி ரூபாய்க்கும், மேக்ஸ்வேலை 11 கோடி ரூபாய்க்கும், மொகதும் சிராஜை 7 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
Welcome to #VIVOIPLRetention @RCBTweets have zeroed down on the retention list ?
— IndianPremierLeague (@IPL) November 30, 2021
What do you make of it? ?#VIVOIPL pic.twitter.com/77AzHSVPH5