பெங்களூரு கூட்ட நெரிசலுக்கான காரணம் இதுதான் - RCB அணியின் பதிவால் சர்ச்சை

Virat Kohli Royal Challengers Bangalore Bengaluru
By Karthikraja Jun 05, 2025 07:06 AM GMT
Report

RCB வெற்றி கொண்டாட கூட்ட நெரிசலில் உயிரிழப்பிற்கு RCB அணியின் எக்ஸ் பதிவும் காரணம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

RCB கொண்டாட்டத்தில் உயிரிழப்பு

18 வருட ஐபிஎல் வரலாற்றில், முதல்முறையாக RCB அணி கோப்பையை வென்றதால், நாடு முழுவதும் RCB ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடினர். 

பெங்களூரு கூட்ட நெரிசலுக்கான காரணம் இதுதான் - RCB அணியின் பதிவால் சர்ச்சை | Rcb Stampede Death Reason Rcb X Post Controversy

இந்நிலையில், RCB வெற்றி கொண்டாட்டத்தின் போது, பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் மறைவிற்கு, பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின், குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், காயமடைந்தவர்களை மாநில முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

RCB அணியின் எக்ஸ் பதிவு

முன்னதாக, திறந்த வெளி பேருந்து பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என பாதுகாப்பு காரணத்தால் காவல்துறை காலையிலே அனுமதி வழங்க மறுத்தது.  

பெங்களூரு கூட்ட நெரிசலுக்கான காரணம் இதுதான் - RCB அணியின் பதிவால் சர்ச்சை | Rcb Stampede Death Reason Rcb X Post Controversy

அதற்கு மாறாக, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், RCB அணி தனது எக்ஸ் பக்கத்தில், மாலை 3;14 மணியளவில் கூட கர்நாடக சட்டமன்றத்தில் இருந்து சின்னசாமி மைதானம் வரை வாகன பேரணி நடைபெறும் என ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தது பதிவு வெளியிட்டது.  

இதனையடுத்து, ரசிகர்கள் அனைவரும் RCB வீரர்களை காண கர்நாடக சட்டமன்றம் அருகே பெருமளவில் குவிந்தனர்.

ஆனால், வீரர்கள் யாரும் திறந்த வெளி வாகனத்தில் வராமல், பேருந்தின் உள்ளே அமர்ந்து வந்ததால், வீரர்களை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற நோக்கில், மைதானம் நோக்கி ரசிகர்கள் விரைந்தனர். 

பெங்களூரு கூட்ட நெரிசலுக்கான காரணம் இதுதான் - RCB அணியின் பதிவால் சர்ச்சை | Rcb Stampede Death Reason Rcb X Post Controversy

ஒருவேளை திறந்தவெளி பேருந்து பேரணி நடத்தப்பட்டிருந்தால், ரசிகர்கள் சாலையின் ஓரம் நின்று வீரர்களை பார்த்து விட்டு கலைந்து சென்றிருக்க வாய்ப்பு உண்டு.

ஆனால், வெறும், 40,000 பேர் அமரும் வகையில் உள்ள சின்னசாமி மைதானத்தின் வெளியே 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் குவிந்தனர்.   

பெங்களூரு கூட்ட நெரிசலுக்கான காரணம் இதுதான் - RCB அணியின் பதிவால் சர்ச்சை | Rcb Stampede Death Reason Rcb X Post Controversy

பாஸ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டதால், கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முறையற்ற திட்டமிடல்

கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை லேசான தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்ததில், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மூச்சுத்திணறல் சிக்கி பலரும் மயக்கமடைந்தனர். ரசிகர்கள் கூட்ட நெரிசலில் தள்ளாடி கீழே விழுந்தனர். 

இதில், 11 பேர் உயிரிழந்து வெற்றி கொண்டாட்டம் பெரும் சோக நிகழ்வாக மாறியது.  

பெங்களூரு கூட்ட நெரிசலுக்கான காரணம் இதுதான் - RCB அணியின் பதிவால் சர்ச்சை | Rcb Stampede Death Reason Rcb X Post Controversy

அவசரகதியில், எந்த முறையான திட்டமிடலும் இல்லாமல் மறுநாளே வெற்றிகொண்டாட்டம் நடத்தியதே உயிரிழப்பு காரணம் என RCB அணி நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசு மீது விமர்சனம் எழுந்துள்ளது.

ஹேசல்வுட் போன்ற வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக நாடு திரும்பும் சூழல் இருந்ததால், மறுநாளே வெற்றியை கொண்டாட RCB அணி நிர்வாகம் கர்நாடக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. 

பெங்களூரு கூட்ட நெரிசலுக்கான காரணம் இதுதான் - RCB அணியின் பதிவால் சர்ச்சை | Rcb Stampede Death Reason Rcb X Post Controversy

முறையான திட்டமிடலுடன், வார இறுதிநாட்களில் இந்த நிகழ்வுகளை நடத்தி இருந்தால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US