பெங்களூரு அணியில் புது பிரச்சனை - கேப்டன் யார் என தெரியாததால் குழப்பம்
பெங்களூரு அணிக்கு புதிய கேப்டன் யார் என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் பெங்களூரு அணியில் ஐபிஎல் ஆரம்பித்த காலத்தில் இருந்தே விளையாடி வரும் விராட் கோலி கடந்த 7 ஆண்டுகளாக கேப்டனாகவும் பதவி வகித்து வந்தார்.
ஆனால் அவரால் ஐபிஎல் கோப்பையை வெல்லவே முடியவில்லை. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக கடந்தாண்டு சீசனுடன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களது கேப்டன்களுடன் போட்டித் தொடரை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில் பெங்களூரு அணி தடுமாறி வருகிறது.
இதனிடையே பெங்களூரு அணி ஏன் இவ்வளவு கால தாமதம் செய்கிறது என மூத்த அதிகாரி ஒருவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு தற்போது அணியில் நீண்ட அனுபவம் கொண்ட வீரர்களான தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல், டூப்ளசிஸ் ஆகியோர் இருக்கின்றனர்.
இவர்களில் தினேஷ் கார்த்திக்கிற்கு விராட் கோலி குறித்தும், பெங்களூரு அணி நிர்வாகம் குறித்தும் நன்கு தெரியும். அதேபோல் கடந்தாண்டு முதல் மேக்ஸ்வெல் இந்த அணியின் சிறந்த வீரராக உள்ளார்.
மேலும் டூபிளசிஸ் தென்னாப்பிரிக்கா அணியையே வழி நடத்தியவர் என்பதால் இந்த மூவரின் கேப்டன்சி, மற்றும் செயல்பாடுகள் குறித்து பார்த்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும். இதற்காக முன்னாள் கேப்டன் விராட் கோலியிடம் இருந்தும் அறிவுரைகளும் பெறப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.