விராட் கோலியின் இடத்தில் இனி இவரா? RCB அணியின் புதிய கேப்டன் குறித்து கசிந்த தகவல்
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருக்க போகும் வீரர் குறித்த விபரம் கசிந்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக புதிய கேப்டன் செயல்பட இருக்கிறார். ஏனெனில் ஏற்கனவே அந்த அணியின் கேப்டனாக பல ஆண்டுகள் செயல்பட்டு வந்த விராட் கோலி கடந்த சீசனில் தனது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியதால் இந்த ஆண்டு அவர் ஆர்சிபி அணியில் ஒரு வீரராக இருக்கிறார்.
இதன் காரணமாக தற்போது ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஆர்சிபி அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு டெல்லி அணியில் இருந்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் கடந்த 2019-20 ஆம் ஆண்டு டெல்லி அணியை வழிநடத்திய ஸ்ரேயாஸ் அய்யர் தனது அற்புதமான கேப்டன்சி மூலம் டெல்லி அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால் கடந்த சீசனில் காயம் காரணமாக கேப்டன்சி வாய்ப்பை தவற விட்ட அவர் தற்போது டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதால் மீண்டும் அந்த அணிக்கு திரும்பும் மாட்டார் என்றே தெரிகிறது.
இதன் காரணமாக நிச்சயம் அவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் போட்டி போடும்.
அந்த வகையில் ஆர்சிபி இதில் முந்தலாம்.