CSK-விடம் இருந்து முதல் இடத்தை தட்டிப் பறித்த RCB! புள்ளிப் பட்டியலில் நடந்த மிகப் பெரிய மாற்றம்
ராஜஸ்தான் அணிக்கெதிரான வெற்றிக்கு பின், பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு அணி இதன் மூலம் தொடர்ந்து 4 வெற்றிகளை பெற்று, ஒரு தோல்விகளைக் கூட சந்திக்காமல், 8 புள்ளிகள் மற்றும் +1.009 நெட் ரன் ரேட் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 6 (+1.142) புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் 6 (+0.426) புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று பெங்களூரு அணியிடம் இருந்து முதல் இடத்தை பிடித்தது. ஆனால் நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பெங்களூரு மீண்டும் முதல் இடத்தை பிடித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.