இன்று நாங்கள் கட்டியது, நம்பிக்கையில் போட்ட ஒவ்வொரு செங்கல்தான் - RCB அணியின் பதிவு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டியை குறிப்பிட்டு ஒரு கடைசி நடனம் என பதிவிட்டுள்ளது.
இதுவரை கிண்ணத்தை வென்றதில்லை
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் அனுபவ வீரர் விராட் கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இதுவரை கிண்ணத்தை வென்றதில்லை என்பதால் இப்போட்டிக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
கடைசியாக ஒரு ஆட்டம்
இந்த நிலையில், இன்றையப் போட்டியை குறிப்பிட்டு பெங்களூரு அணி வெளியிட்டுள்ள பதிவில், "இன்று நாங்கள் கட்டியது; நம்பிக்கையில் போடப்பட்ட ஒவ்வொரு செங்கல்தான். கடைசியாக ஒரு ஆட்டம்" என குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் மற்றொரு பதிவில், "மில்லியன் கணக்கான குரல்களால் உருவாக்கப்பட்டதாக நம்புகிறோம்" எனவும் கூறியுள்ளது.
இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால், இன்றைய இறுதிப்போட்டிக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Every brick laid in belief. Today, we build. 🙌 pic.twitter.com/th9XtzsG62
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 3, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |