மழையால் பெங்களூரு Vs கொல்கத்தா போட்டி பாதிப்பு: 5 ஓவர் போட்டியாக நடைபெறுமா?
ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
மழையால் பாதிப்பு
2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 57 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர்பதற்ற சூழலால் ஒத்தி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இருதரப்பிலும் சுமூகமான முடிவு எட்டப்பட்டதால் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஆனால் மழை குறுக்கீடு காரணமாக இன்னும் போட்டி தொடங்கப்படவில்லை. நாணய சுழற்சி கூட தொடங்காத நிலையில் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை மழை நின்று நிலைமை சீரானால் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |