அந்த CSK வீரருக்காக போட்டிப்போட தயார்: RCB அணி அதிரடி
சென்னை சூப்பர் கிங்ஸின் பிரபல வீரர் அம்பதி ராயுடுவை ஏலத்தில் எடுக்க பெங்களூரு அணி முனைப்புக்காட்டி வருகிறது.
மேலும் அவருக்கான ஏலத்தொகையை தற்போதே எடுத்து வைத்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு IPL போட்டிகள் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் இந்த மாதம் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த ஏலத்திற்கான வீரர்களை IPL அணிகள் நான்கு வீரர்கள் வரை தக்கவைத்து கொண்டு மற்ற வீரர்களை விடிவித்துள்ளது.
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய நான்கு வீரர்களையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலி, மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூன்று வீரர்களை தக்கவைத்து கொண்டு மற்ற வீரர்களை விடிவித்துள்ளனர்.
பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதால் அந்த அணி கேப்டன் காண வீரரை தேர்வு செய்வதிலும், நடுவரிசையில் நிலைத்து ஆட ஒரு வீரரை தேர்வு செய்வதிலும் முனைப்பு காட்டிவருகிறது.
இந்த நிலையில் பெங்களூரு அணியின் கேப்டனாக ஜேசன் ஹோல்டரையும், நடுவரிசைக்கு சென்னை சூப்பர் கிங்ஸின் அணிக்காக விளையாடிய அம்பதி ராயுடுவை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக பெங்களூரு அணியின் நெருங்கிய வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனித்தடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பெங்களூரு அணி இதற்காக ஜேசன் ஹோல்டருக்கு ரூ.12 கோடியையும், அம்பதி ராயுடுவுக்கு ரூ.8 கோடியையும் மேலும் ரியான் பராக்கிற்கு ரூ.7 கொடியையும் இப்போதே எடுத்து வைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.