கடைசி வரை வெற்றிக்கு போராடிய இளம் வீரர்! பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூர் அணி அபார வெற்றி
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப், பெங்களூர் அணி மோதல்
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
மொகாலியில் இன்று துவங்கிய 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
@BCCI/IPL
அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. முதலில் ஆடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் எடுத்தது.
@BCCI/IPL
இதில் அதிகபட்சமாக விராட் கோலி 47 பந்துகளில் 56 ஓட்டங்கள், அதிரடியாக ஆடிய டூ பிளசிஸ் 56 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ஓட்டங்கள் குவித்தனர்.
மடமடவென சரிந்த விக்கெட்
இதனை அடுத்து 20 ஓவரில் 174 இலக்கோடு களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கத்திலேயே திணறியது. அதர்வா டேட், மேதிவ் ஷார்ட், லிவிங்ஸ்டோன் போன்ற வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
@BCCI/IPL
ஒரு பக்கம் நிதானமாக ஆடிய பிரபீஸ்ரன் சிங் 46 ஓட்டங்கள் எடுத்து பர்னெல் பந்தில் போல்ட் ஆனார். அடுத்த வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
@BCCI/IPL
ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் விக்கெட் கீப்பர் ஜிதீஸ் சர்மா சிறப்பாக ஆடி கொண்டே வந்தார். அடிக்கடி சிக்சர்களை பறக்க விட்ட அவர் பெங்களூர் அணி வீரர்களுக்கு மரண பயத்தை காட்டினார்.
பெங்களூர் அணி வெற்றி
ஆனால் மறுபக்கம் விக்கெட் சரிந்து கொண்டே மறுபுறம் வெற்றியின் இலக்கை நெருங்கி கொண்டிருந்த ஜிதீஸ் சர்மா, ஹர்ச்ல் பட்டேல் வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
@BCCI/IPL
பெங்களூர் அணியில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஹசரன்கா 2 விக்கெட்டுகளையும், ஹர்சல் பட்டேல் மற்றும் பர்னெல் தலா 1 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி பாயின்ஸ் டேபிளில் 3 வெற்றிகளுடன் 5வது இடத்தை பிடித்துள்ளது.