ஒரே ஓவரில் 36 ஓட்டங்கள் விளாசி வரலாற்று சாதனை படைத்தார் ஐடேஜா! கடைசி ஓவரில் கதறிய ஆர்சிபி
2021 ஐபிஎல் தொடரில் பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் சிஎஸ்கே வீரர் ஜடேஜா 36 ஓட்டங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
இன்று மும்பையில் நடந்த 2021 ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் சென்னை-பெங்களுரு அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 191 ஓட்டங்கள் குவித்தது.
சென்னை 191 ஓட்டங்கள் குவிக்க முக்கிய காரணம் ஜடேஜா ஆவார், அவர் 28 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர் விளாசி 62 ஓட்டங்கள் குவித்தார்.
குறிப்பாக ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் 36 ஓட்டங்கள் விளாசினார் ஜடேஜா.
கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளை சிக்சர் விளாசிய ஜடேஜா, நோ-பாலாக போட்ட 3வது பந்தையும் சிக்சர் விளாசி ஹாட்ரிக் சிக்சர் அடித்தார். ப்ரீ ஹிட் பந்தையும் சிக்சர் விளாசினார்.
4வது பந்தில் இரண்டு ஓட்டங்களை எடுத்தார், 5வது பந்தை மீண்டும் சிக்சர் அடித்தார், கடைசி பந்தை பவுண்டரி அடித்து பட்டையை கிளப்பினார்.
ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்சர், ஒரு பவுண்டரி, 2 ஓட்டங்கள் மற்றும் நோ-பாலுக்கு ஒரு ரன் என மொத்தம் 37 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் 36 குவித்து கிறிஸ் கெய்ல் சாதனையை சமன் செய்துள்ளார் ஜடேஜா.
அதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்பு 1 ஓவரில் 37 ஓட்டங்கள் அடிக்கப்பட்ட சாதனையும் சமன் செய்யப்பட்டுள்ளது.
Thank Yohu RockStar #Jadeja ❤#CSk ? pic.twitter.com/9JeyGlB7D3
— mani (@PkFanRaLuchaa) April 25, 2021
இன்றையை நிலவரப்படி 2021 ஐபில் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் கேப் வைத்திருப்பவர் ஹர்ஸ் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.