கனடாவில் ஆயுதமேந்திய சந்தேக நபரால் கடத்தப்பட்ட இளம் பெண்: பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
கனடாவில் ஜாஸ்மின் அயர்ன் என்ற 24 வயது இளம்பெண் ஆயுதமேந்திய சந்தேக நபர்களால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
ஆயுதமேந்திய சந்தேக நபர்களால் கடத்தப்பட்ட இளம் பெண்
கனடாவின் Loon Lake RCMP அதிகாரிகள், ஆயுதமேந்திய ஒருவருடன் இருப்பதாக நம்பப்படும் 24 வயது ஜாஸ்மின் அயர்னை(Jasmine Iron) தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மே 15ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11:00 மணியளவில் ஐலண்ட் லேக் ஃபர்ஸ்ட் நேஷன் (Ministikwan) பகுதியில் இருந்து அயரன் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்டது.
அத்துடன் அவர் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கவலைகள் எழுப்பப்பட்டன.
இந்த தீவிரமான சூழ்நிலையை தொடர்ந்து, சஸ்காட்செவன்(Saskatchewan) RCMP மே 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10:27 மணியளவில் மாகாண அளவிலான அவசர எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், ஜாஸ்மின் அயர்னை கடத்தியிருக்கலாம் என நம்பப்படும் ஆயுதமேந்திய ஆபத்தான நபர் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சந்தேக நபரின் அடையாளம்
சந்தேக நபர் 24 வயதுடைய மைக்கேல் பூவியர் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர் கடைசியாக மே 15ஆம் திகதி இரவு 11:00 மணியளவில் ஐலண்ட் லேக் ஃபர்ஸ்ட் நேஷனில் காணப்பட்டார். அவர் ஐந்து அடி ஆறு அங்குல உயரம், 215 பவுண்டுகள் எடை, பழுப்பு நிற கண்கள் மற்றும் கருப்பு முடி கொண்டவர் என்று விவரிக்கப்படுகிறார்.
பூவியர் சஸ்காட்ச்சுவான் உரிமத் தகடு எண் 412 NPF கொண்ட கருப்பு டாட்ஜ் ஜர்னி அல்லது சஸ்காட்ச்சுவான் உரிமத் தகடு எண் 580 LXY கொண்ட கருப்பு டாட்ஜ் கேரவனில் பயணம் செய்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு RCMP கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இது ஒரு தொடர்ச்சியான விசாரணை என்றும், கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது மேலும் புதுப்பிப்புகள் வழங்கப்படும் என்றும் RCMP பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |